ராசி பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கும் பெயர்கள்
மனிதன் பிறக்கும் பொழுது நேரம் காலம் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே ஓருவரின் நட்சத்திரத்தின் மூலம் ராசியும் பெயரும் தீர்மானிக்கப்படுகிறது. இந்து சமயத்தில் ராசி நட்ச்சத்திரம் ஜோதிடம் இவற்றின் மீது அளவு கடந்த நம்பிக்கை உண்டு.
அத்தகைய ஜோதிடத்தில் முதன்மையாக கருதப்படுவது மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகள். ஓவ்வொரு ராசியும் ஓவ்வோரு குணநலத்தை பெற்று உலகில் ஆட்சி புரிகிறது. மனித வாழ்வில் மிக முக்கியமாக கருதப்படுவது ராசியும் நட்ச்சத்திரமும் இவை சரியாக இருந்தால் மாடமாளிகையும் கட்டலாம் சரியில்லை என்றால் குடிசையிலும் வாழலாம் என்கிறது ஜோதிடம் நூல்கள்.

இப்படி ஓருவரின் வாழ்வின் இன்றியமையாத ஓன்றாக ராசி நட்ச்சத்திரம் பார்க்கப்படுகிறது. ஓவ்வொரு ராசியும் 30 பாகை அளவு என கூறப்படுகிறது. இதனை மையமாக கொண்டு ஓவ்வொரு உயிரின் குணங்களும், செயல்பாடுகளும், வாழ்க்கை முறைகளும் மாறும்.
ராசி பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழே காண்போம்
மேஷம் – Aries
ரிஷபம் – Taurus
மிதுனம் – Gemini
கடகம் – Cancer
சிம்மம் – Leo
கன்னி – Virgo
துலாம் – Libra
விருச்சிகம் – Scorpio
தனுசு – Sagittarius
மகரம் – Capricorn
கும்பம் – Aquarius
மீனம் – Pisces
மேலும், ஜோதிடத்தில் ராசிகளை ஆண், பெண் ராசிகள், நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் திசைகளைக் குறிப்பிடும் ராசிகள் என வகைப் படுத்தபடுகிறது.
இதையும் அறிக: கனவு பலன்கள் – என்ன கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா?
சர ராசிகள்
மேஷம், கடகம், துலாம், மகரம்
ஸ்திர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
உபய ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்