நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 உலக அளவில் 5 வது இடத்தில் உள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸ கலக்கிக் கொண்டிருக்கிறது.
கேஜிஎப் 2 திரைப்படமானது ஏப்ரல் 14 ல் உலகமெங்கும் திரையிடப்பட்டது. நினைத்து கூட பார்க்க முடியாத வெற்றியை தந்து உள்ளது. கன்னட திரையுலகையும் கடந்து ஏன் இந்தியாவையும் கடந்து உலக அளவில் வெற்றி கண்டுள்ளது. 17ம் தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 70 மில்லியன் யூஎஸ் டாலர், இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் வசூலித்தது.

2ம் இடம் பிடித்தது, அடுத்து 22ம் தேதி முதல் 24 தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆப் வசூலில் 19 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 142 கோடி வசூலித்து உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 5வது இடம் பிடித்துள்ளது. இப்படம் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் 10 இடம் பிடித்துள்ளது குறிப்பிட தக்க ஓன்றாகும். உலக அளவில் கேஜிஎப் 2 படம் 11 நாட்களில் 850 கோடி வசூலை எடுத்துள்ளது.
கேஜிஎப்2 இப்படி தமிழில் மாபெரும் வெற்றி அடைய முக்கிய காரணம் ஓருவர் அவர்,”கன்னடம் வெர்ஷனுக்கு ஏத்த மாதிரியே லிப் சின்க் வெச்சு தமிழ் வரிகள் எழுதுறது கஷ்டமா இருக்கும். கன்னடம் மற்றும் தமிழ் மொழிக்கு வித்தியாசம் அதிகம். எங்கேயிருந்து லிப் சின்க் எடுக்குறோம், எப்படி வரிகள் வெச்சிட்டு முடிக்குறோம்ங்குறது முக்கியம்.” – அசோக்
கேஜிஎப் 1ம் பாகத்தில் தமிழில் பேசிய அனைத்து ப்ன்ச்களும் ட்ரன்டிங் அதிலும் ஸ்கிப்ட் ரைட்டிங் பன்னுனது அசோக் தான் அதே கூட்டனியை கேஜிஎப்2 ம் பாகத்திலும் இணைந்து அனைவரது மனதிலும் பதிய செய்துள்ளனர்.