பீம ஏகாதசி 2023 விரதம் என்றால் என்ன? எப்போது வருகிறது?

0
31

பீம ஏகாதசி 2023 விரதம் இந்த மே மாதம் இறுதியில் வருகின்றது. இந்து மக்களிடத்தில் மிகவும் உயர்வாக வணங்கும் விரதங்களில் ஏகாதசி விரதமும் ஓன்று. இந்த ஏகாதசி விரதமானது மாதத்திற்கு இருமுறை வருவது வழக்கம். அது வளர்பிறை ஏகாதசி தேய்பிறை ஏகாதசி என இரண்டு ஏகாதசி வருகிறது.

ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை நினைத்து வழிபாடு செய்து விஷ்ணு சகஸ்வரநாமம் பாராயணம் செய்து விரதம் மேற் கொள்பவர்கள் ஏராளம். ஆண்டு முழவதும் வருகின்ற ஏகாதசியை இந்து மத வழிபாட்டாளர்கள் இதனை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். ஏகாதசிகளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் ஏகாதசிகள் புரட்டாசி மாத ஏகாதசி, மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி சிறப்புடையதாகும்.

பீமா ஏகாதசி

ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், ஏகாதசி விரதத்தை நாள் தவறாமல் மேற்கொள்பவர்களுக்கு எவ்வித இடர்பாடுகளும் வாழ்வில் வராது. ஏகாதசியில் விரதம் மேற்கொள்பவர்களின் பாவங்கள் குறைவதுடன் மோட்சம் கிடைக்கும். இந்த பூமியில் மறுபிறவி என்பதே கிடையாது.

பீமா ஏகாதசி என்றால் என்ன? எப்போது வருகிறது?

பஞ்சபாண்டவர்களில் பலம் நிறைந்த பீமன் தன்னுடைய பலத்தை அதிகரிக்கவும் செம்மையுடன் செயல்படவும் வைகாசி மாத ஏகாதசியில் விரதம் இருந்து விஷ்ணுவிடம் பலனை பெற்றார். அதனால் இந்த ஏகாதசியை பீமா ஏகாதசி என்பர். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் குபேரருக்கு செல்வங்களுக்கு அதிபதியாக ஆக்கினார் என்று புராணங்கள் கூறுகிறது.

இவ்வளவு சிறப்புமிக்க பீமா ஏகாதசியானது மே மாதம் 30ந் தேதி செவ்வாய்கிழமை தொடங்கி 31ந் தேதி புதன்கிழமை வரை  நீடிக்கிறது. இந்த நாட்களில் பீமா ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. பாரனை செய்யும் நாளானது ஜூன் 1ந் தேதி வியாழக்கிழமை நாளாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here