இன்றைய அமாவாசையின் முக்கியத்துவமும் சிறப்பும்

0
11

மாத மாதம் தொடர்ந்து அமாவாசை விரதத்தை இந்து மக்கள் முறையாக கடைபிடித்து வருகின்றனர். அமாவாசைகளில் ஓரு சில அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. சித்திரை அமாவாசை, ஆடி அமாவாசை, மாஹல்ய அமாவாசை என சிறப்பு அமாவாசைகளும் உள்ளது. அதில் ஓன்று தான் இன்றைய தை மாத அமாவாசை சரி அப்படி என்ன சிறப்பு இந்த தை மாத அமாவாசை என்பதை இந்த பதிவின் மூலம் அறியலாம்.

தை மாத அமாவாசையானது 18ந் தேதி வியாழக்கிழைமை இரவு 10. 09 மணிக்கு தொடங்கி 19ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9.47 மணி வரை திதியானது நீடிப்பதாக பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

இன்றைய அமாவாசையின் முக்கியத்துவமும் சிறப்பும்
இன்றைய அமாவாசையின் முக்கியத்துவமும் சிறப்பும்

சரி மாத மாதம் வரும் அமாவாசைக்கும் தை மாதம் வரும் அமாவாசைக்கும் என சிறப்பு என்றால் இன்று முருப் பெருமானின் கிருத்திகை நட்சத்திரமும் கூடி வருகிறது. இதனால் இந்த அமாவாசை சிறப்புக்குரியதாக இந்து மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இந்த தை மாத அமாவாசையில் நம் முன்னோர்களின் ஆசியோடு எம்பெருமான் முருகனின் ஆசியும் கிடைக்க பெறும் பாக்கியம் உள்ளது.

அமாவாசை அன்று ஆண்கள் அதிகாலை எழுந்து தலைக்குளித்து அவரவரவ முன்னோர்களுக்கு எள் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்வது நம் முன்னோர்களுக்கு செய்யும் பாக்கியமாகும். இந்த தர்ப்பணத்தை முன்னோர்கள் ஏற்றுக் கொண்டு நம் குடும்பத்தாரை ஆசிர்வதிப்பதாக ஐதீகம்.

தர்ப்பணம் முடித்து காலை ஓரு வேலை விரதம் இருந்து மதியம் உணவினை படைத்து காக்கைக்கு உணவை இட்டு மற்றும் பசுவிற்கு அரிசி, வெல்லம், அகத்திக் கீரை  போன்றவற்றை தானமாக கொடுத்து ஆசிப் பெறலாம். பின்னர், உணவினை அருந்தினால் அமாவாசைய ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தை மாத அமாவாசை கிருத்திகை நட்சத்திரமும் கூடி வருவதால் முருகனின் கந்த சஷ்டி கவசம் அல்லது முருகனின் பாடல்களை பாடி வணங்குவது சிறப்பு. மேலும், இயலாவதவர்களுக்கு நம்மால் முடிந்ததை தானம் செய்வதும் சிறப்புக்குரியதாகும்.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here