சென்னை ஆவடி அருகே விஷவாயுவால் 3 பேர் உயிரிழப்பு

0
174

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாசல் சிவசக்தி நகரில் வசிப்பவர் பிரேம்நாத் அவரது வீட்டில் 10 அழமுள்ள குடிநீர் தொட்டி உள்ளது. தொட்டியை நேற்று ஆட்களை வைத்து சுத்தம் செய்துள்ளார். இன்று சுத்தம் செய்த தொட்டியில் 2 அடி ஆழத்திற்கு தண்ணீ்ர் இருந்ததை அடுத்து அவரே அத்தொட்டியில் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.

அப்போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்து உள்ளார். அருகில் இருந்த அவரது மகன் பிரேம்குமார் அருகிலிருந்த பிரமோத், சாராநாத் ஆகியோரும் தொட்டிக்குள் இறங்கி காப்பற்ற முயன்றுள்ளனர்.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாசல்

அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதில் பிதேம்நாத்,பிரோம்குமார், பரமோத் ஆகிய மூவரும் இறந்த நிலையிலும் சாராநாத் மட்டும் உயிருடனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்கதையாகும் விஷவாயு தாக்கி இழக்கும் உயிர்கள் தமிழ்நாட்டில் பெருகுவது வருத்தத்திற்கு உரியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here