வெள்ளரிக்காய் தரும் எண்ணற்ற நன்மைகள்

0
29

கோடை காலங்களில் வெப்பம் அதிகரித்து உடல் முழுவதும் தகித்து காணப்படும் இது போன்ற காலங்களில் நம் உடலை குளுர்ச்சியாக வைத்து கொள்ள இயற்கையின் படைப்புகளில் ஓன்றுதான் இந்த வெள்ளரிப்பிஞ்சு. கோடை காலங்களில் தினமும் ஓரு வெள்ளரிக்காயை சுவைப்பது நல்லது. கோடை காலங்களில் அதிலும் அக்னி எனப்படும் கத்ரி வெயில் காலங்களில் வெப்பம் பல இடங்களில் சதம் அடித்து மனித உடலை வாட்டி வதைக்கும் இது போன்ற காலங்களில் உடலுக்கு நீர்ச்சத்துகள் நிறைந்த பழ வகைகளை சாப்பிடுவது ஏற்றது.

கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கும் பனநுங்கு, இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிபிஞ்சு சாறு, கரும்பு பால், கம்மங்கூழ், எலுமிச்சை பழச்சாறு, சாத்துக்குடி பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டு நம் உடலினை குளுர்ச்சியாக வைப்பது நம் கடமையாகும்.

இயற்கையாகவே அனைத்து காய்கறிகளிலும் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. பச்சையாக உண்ணப்படும் இந்த வெள்ளரிகாயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது. அதனை இந்த பதிவில் அறியலாம்.

வெள்ளரிக்காய் தரும் எண்ணற்ற நன்மைகள்
வெள்ளரிக்காய் தரும் எண்ணற்ற நன்மைகள்

வெள்ளரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்:

  • சோடியம்
  • கால்சியம்
  • மெக்னீசீயம்
  • இரும்புச்சத்து
  • பாஸ்பரஸ்
  • கந்தகம்
  • சிலிக்கான்
  • பொட்டாசியம்

வெள்ளரிபிஞ்சில் காணப்படும் நன்மைகள்:

  1. கோடை காலங்களில் நாம் உண்ணும் உணவு எளிதில் செறிமானம் ஆகாது. அந்த செறிமான பிரச்சனைகளை இந்த வெள்ளரிக்காய் சரிப்படுத்தும். மலச்சிக்கல் வரமால் தடுக்கும்.
  2. கோடையில் ஏற்படும் தொற்றுகளை அண்டாமல் உடலை பாதுகாக்கிறது. வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழிக்கும் தன்மையை வெள்ளரிக்காய் பெற்றுள்ளது.
  3. சிறுநீர் பாதையில் ஏற்படும் கடுமையான எரிச்சல் சிறுநீரக கற்கள் போன்றவற்றிற்கு சிறந்த மருத்தாகவும் வெள்ளரிக்காய் விளங்குகிறது.
  4. பெண்களுக்கு கர்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள், மாதவீடாய் கோளாறுகள், அடிவயிற்றில் காணப்படும் எரிச்சல், வெப்பத்தினால் சிறுநீர் பாதையில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றையும் தடுக்கிறது.
  5. இன்சுலின் சுரக்கவும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மருந்தாகவும் வெள்ளரிக்காய் இருந்து வருகிறது.
  6. வாய்துர் நாற்றத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் பல் மற்றும் ஈறுகளை வலுவாக பாதுகாக்கிறது.
  7. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிச்சாறு இரப்பை மற்றும் குடல் புண்கள், நெஞ்செரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

இப்படி பலவகைகளில் கோடை காலத்தில் மனித உடலை பாதுகாத்துக் கொள்ள இயற்கையால் கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வலுவான மற்றும் ஆரோக்கியமான உடலை மேம்படுத்த வெள்ளரிக்காயை சாப்பிடுங்கள்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here