எண்ணிலடங்கா நன்மைகளை அள்ளி தரும் பன்னீர் திராட்சை

0
4

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திராட்சை பழங்களை விரும்பி சாப்பிடுவர். ஆனால், பன்னீர் திராட்சையை பலரும் ஓதுக்கி விடுவதும் உண்டு ஏனெனில் அதில் உள்ள புளிப்புச் சுவை மற்றும் அதில் காணப்படும் வித்து பச்சை நிறத்தில் காணப்படும் வித்து இல்லாத சுவை அதிகமாக இருக்கும் திராட்சையை அதிகம் விரும்புவர். குறிப்பாக குழந்தைகள் இந்த பச்சை நிற திராட்சையையே சுவைத்து ருசிப்பர்.

பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, சிவப்பு திராட்சை என திராட்சை வகைகள் உள்ளது. இயற்கையாக விளையும் திராட்சை பழங்கள் மனித உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அதிலும் கருப்பு திராட்சையான பன்னீர் திராட்சைக்கு பல்வேறு பயன்களை கொண்டுள்ளது. திராட்சை வகைகள் சிட்ரஸ் குடும்ப வகையை சார்ந்தது. இதில் மனிதர்களுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன.

எண்ணிலடங்கா நன்மைகளை அள்ளி தரும் பன்னீர் திராட்சை
எண்ணிலடங்கா நன்மைகளை அள்ளி தரும் பன்னீர் திராட்சை

திராட்சையில் காணப்படும் சத்துக்கள்:

வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஜீங்க், இரும்புச்சத்து, காப்பர் போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்: முட்டையின் மஞ்சள் கருவில் நிறைந்துள்ள நன்மைகள்

பன்னீர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:

  1. கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டினை கட்டுப்படுத்தவும் உடலினை குளிர்ச்சியாக வைக்கவும் பன்னீர் திராட்சை உதவுகிறது.
  2. நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை தரவல்லதாகவும் இருக்கிறது.
  3. நீர்சத்து அதிகம் உள்ளதால் கோடை காலங்களில் ஏற்படும் நாவறட்சி மற்றும் உடலுக்கு தேவையான நீர்சத்துகளை அதிகமாக அள்ளி தருகிறது.
  4. வெப்பம் அதிகம் உள்ள காலங்களில் உடலுக்கு தேவையான நீர்சத்து குறைவு ஏற்படுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் இதை தவிர்க்கும் பணியை பன்னீர் திராட்சை செய்கிறது.
  5. பன்னீர் திராட்சையில் கலோரிகள் மிக குறைவு ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுவதால் உடல் பருமன் மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், பசியை கட்டுக்கள் வைக்கவும் உதவுகிறது.
  6. பன்னீர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கோடை காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  7. லிமோனன் என்ற சத்து பன்னீர் திராட்சையில் இருப்பதால் புற்றுநோய்களிலிருந்து விடுவிக்க வழிவகை செய்கிறது.
  8. பன்னீர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகவும் விளங்குகிறது.

பல வகையான நன்மைகளை கொடுக்கும் பன்னீர் திராட்சையை மூன்று அல்லது நான்கு முறை எடுத்து கொள்ளலாம். குளிர் மற்றும் மழை காலங்களில் குறைவாக எடுத்துக் கொள்வது அவரவர் உடலினை பொறுத்தது. சீட்லஸ் திராட்சையை காட்டிலும் பன்னீர் திராட்சை விலையிலும் குறைவாகவே உள்ளது.

மற்ற ஆப்பிள், மாதுலை, சாத்துக்குடி போன்ற பழவகைகளை விட விலை குறைவாகவும் சத்துக்கள் நிறைவாகவும் உள்ள பன்னீர் திராட்சையை அதிகம் உட்கொண்டு உடல் நலத்தை நன்றாக பேணுவோம்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here