முட்டையின் மஞ்சள் கருவில் நிறைந்துள்ள நன்மைகள்

0
18

முட்டை சாப்பிடுவதால் எண்ணற்ற புரதங்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது. அதிலும் வளரிளம் பருவ குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற மற்றும் சத்துகள் நிறைந்ததாக நீண்ட நாட்களாக கூறப்பட்டும் சாப்பிட்டும் வருகின்றனர். இது ஓரு புறம் இருக்க முட்டை சைவமா அசைவமா என்றெல்லாம் வேடிக்கையாக கூறுவதுண்டு. சைவப் பிரியர்களோ அசைவத்திற்கு குட்பை சொல்லிவிட்டு முட்டையை மட்டும் சைவம் என்று அதை முழுங்கி வருவதையும் பார்ககிறோம்.

இந்நிலையில் நாள்தோறும் ஓரு முட்டை உணவில் சேர்த்து வருவது நல்லது என்று கூற கேட்டிருக்கிறோம். முட்டையில் காணப்படும் மஞ்சள் கருவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் ஓதுக்கி விடுகின்றனர். ஆனால், வெள்ளைக்கருவில் எவ்வளவு சத்துகள் உள்ளதோ அதே அளவு மஞ்சள் கருவிலும் உள்ளது.

ஊட்டச்சத்தை அள்ளிக் கொடுப்பதில் தாய்பாலுக்கு அடுத்ததாக முட்டை காணப்படுகிறது. அதிலும் முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி மற்றும் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.  பலரும் மஞ்சள் கருவை ஓதுக்க காரணம் சாப்பிடும் போது ஓரு மாவு போல இருந்து தொண்டையை அடைக்கும் இது ஓரு புறம் இருக்க முட்டையின் மஞ்சள் கருவை உண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தாலும் அனைவரும் ஓதுக்குகின்றனர்.

மஞ்சள் கரு முட்டை
மஞ்சள் கரு முட்டை

மஞ்சள் கருவில் காணப்படும் சத்துகள்

 • வைட்டமின் A – 6%
 • வைட்டமின் B – 5.7%
 • வைட்டமின் B- 12.9%
 • பாஸ்பரஸ் – 9%
 • வைட்டமின் B2 – 15%
 • செலினியம் – 22%

மேலும், கால்சியம், ஃபோலிக் அமிலம், அமினோ அமிலம், துத்தநாகம், ஓமேகா 3 போன்ற நிறைவான சத்துகள் மஞ்சள் கருவில் உள்ளன.

 • மஞ்சள் கருவில் உள்ள செல்லினியம் மார்பக புற்றுநோய் மற்றும் குடல்புற்று நோய் வராமல் தடுக்கிறது.
 • ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க உதவுவதோடு ஆக்ஸிஜன் சீராக பரவ உதவுகிறது.
 • மூளை சுறுசுப்பாக இயங்கவும் முதுமையில் கண் வலையங்கள் ஏற்படாமல் இருக்கவும் உறுதுணையாக இருக்கின்றது.
 • வயது முதுமையின் போது ஏற்படும் கண்புரை வரமால் பாதுகாக்கிறது.
 • எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும் புரத உணவாகவும் முட்டை காணப்படுகிறது.

இவ்வளவு அதிகளவில் சத்துகள் நிறைந்த உணவாக முட்டையின் மஞ்சள் கரு உள்ளது. குழந்தைகளுக்கு உணவுடன் அந்த மஞ்சள் கருவை சேர்த்து ஊட்டிவிடுவது நல்லது. இனி வாரம் மூன்று நாட்கள் முட்டையை உணவில் சேத்து நிறைந்த சத்துகளை பெறுவோம்.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here