AK MOTO RIDE என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்குகிறார் அஜித்குமார்

0
36

AK MOTO RIDE என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்க உள்ளதை தனது டிவிட்டர் பக்கத்தில் தானே அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித்குமார்.

சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித்குமார் அவர் தனக்கு இருக்கும் ஆசைகளில் முதன்மையாக கருதப்படும் பைக் ரைடராக உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பைக் ரைடை முடித்த ஏகே உலகின் முன்னணி இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். தற்போது மீதம் உள்ள இடங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் அஜித்திற்கு பைக் மீதும் பைக் ரைடு மீதும் அளவற்ற ஆசையை கொண்டவர் என்பதால் தனது ஆசையை தற்போது AK MOTO RIDE என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தையும் தொடங்கி அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள  இயற்கை வளங்களை ரசிக்கும் வகையில் பைக் சுற்றுலாவிற்கு தேவையான அனைத்தையும் இவரது நிறுவனம் அளிக்கும் எனறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பகுதியில்,

அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here