ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு தமிழ்நாட்டில் மிகவும் பேசு பொருளாக உள்ளது.
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று உள்ளவர். கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளி வந்த அண்ணாத்த திரைப்படம் பெரும் ஏமாற்றத்தை தந்த நிலையில், ஓரு நல்ல கதை அம்சம் கொண்ட இயக்குனரை நடிகர் ரஜினி தேடினார்.
இந்நிலையில், நடிகர் விஜயை வைத்து எடுத்த பீஸ்ட் படத்தின் காட்சி மற்றும் கதை பிடிக்கவே இயக்குனர் நெல்சன் தீலிப் குமாரை அழைத்து எனக்கு பொருத்தமான கதை ஓன்றை கேட்டார். அவரும் கதையை சொல்லவும் அவருக்கும பிடித்து போனது உடனே அவருடன் கூட்டணி வைத்து அப்படத்திற்கு ஜெயிலர் என்ற பெயரையும் வைத்தனர்.

இரு தினங்களுக்கு முன் டெல்லி சென்ற ரஜினி படப்பிடிப்பிற்கு தான் சென்றார் என அனைவரும் நினைத்திருக்க அவர் அரசியல் காரணத்திற்காக பா.ஜ.கா நிர்வாகிகளுடன் பேச சென்று வந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் காணப்படுகிறது. இதற்கு மத்தியில் ரஜினி டெல்லி போய் வந்தது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த ரஜினி ஆளூநரை நான் மரியாதை நிமித்தமாக பார்த்து பேசி வந்துள்ளேன் என்றும் அதில் அரசியல் பேசி இருக்கலாம் என்றும் அதை உங்களிடம் கூற முடியாது எனவும் கூறினார். பின்னர் அரசியலுக்கு நீங்கள் வருவீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று கூறினார். பின்னர் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேளவிக்கு அடுத்து ஜெயிலர் படத்திற்கு நடிக்க செல்ல வேண்டும் என்று கூறி சென்றார்.