சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் பதவிக்கு விஸ்வநாத் ஆனந்த் தேர்வு. இது இந்திய நாட்டிற்கே பெருமை சேர்க்கக் கூடியதாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்திய திருநாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் சீனியராகவும் வலம் வருபவர். இவர் 5 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்வு நடைபெற்றது. அதில், ஆர்கடி டிவோர்கோவிச் 157 வாக்குகளில் இரண்டாம் முறை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரை எதிர்த்து களம் இறங்கிய ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ்-க்கு வெறும் 16 வாக்குகள் மட்டும் கிடைத்தன. ஆர்கடி டிவோர்கோவிச் அணியில் உள்ள இந்திய நாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஸ்வநாதன் ஆனந்த் 1988 இல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார். 2006இல் எலோ ரேட்டிங் (Elo rating), அதாவது செஸ் விளையாட்டில் விளையாடுபவர்களின் திறமையைக் கணக்கிடும் அளவில் 2800 புள்ளிகள் பெற்று உலகளவில் செஸ் வரலாற்றில் அந்த அளவை பெறும் நான்காவது நபர் எனும் பெருமையைப் பெற்றார் விஸ்வநாதன் ஆனந்த். மேலும் உலகத் தர வரிசையில் 21 மாதங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் உலகளவில் அதி வேகமாக செஸ் விளையாடக் கூடிய செஸ் வீரராக வலம் வந்துள்ளார்.
உலக அளவில் சதுரங்க போட்டியில் அசைக்க முடியாத வெற்றியாளராக வலம் வந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தை கவுரவப்படுத்தும் விதமாக இந்திய அரசு 1985இல் அர்ஜுனா விருது, 1987இல் பத்மஸ்ரீ விருது, 1991 – 92 ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, 2000இல் பத்மபூஷன் விருது, 2007இல் இரண்டாம் உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியது. விளையாட்டுத் துறையிலிருந்து பத்மவிபூஷன் பெற்ற முதல் நபர் இவரே.
தமிழ்நாட்டுக்கே பெருமை. இனி செஸ் எங்கேயோ போகும். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த்தை வாழ்த்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்.