தேசிய திரைப்பட விழாவில் 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா துறை.
புதுடெல்லியில் 68 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இனைறு மாலை 4.00 மணிக்கு தொடங்கியது நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள பல மொழி படங்களும் பங்கேற்றன. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், குணச்சித்திர நடிகர், இயக்குனர், அறிமுக இயக்குனர், பின்னனி இசை, பாடகர் என பலவகையில் விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், தமிழ் திரைப்படங்கள் மொத்தம் 10 விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த படத்திற்கான விருது சூரியா நடிப்பில் வெளியாட சூரரைப் போற்று, சிறந்த நடிகருக்கான விருதை சூரியாவும் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளிக்கும், சிறந்த இசைக்காக ஜி.வி. பிரகாஷ்க்கும், சிறந்த திரைக்கதை ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்குராவுக்கும் கிடைக்கப் பெற்றது. மொத்தமாக சூரரைப் போற்றுப் படத்திற்கு மட்டும் 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த திரைக்கதைக்கான விருதை மண்டேலா படத்திற்க்காக மடோன் அஷ்வினுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனர் விருதையும் இவர் தட்டி சென்றுள்ளார்.
சிறந்த படத்தொகுப்பிற்காக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்திற்காக ஸ்ரீகர் பிரசாதிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான விருதை லஷ்மி பிரியா சந்திரமெளலிக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது.
தமிழ்த் திரைப்படங்கள் இந்திய அளவில் நல்ல பெயர் பெற்று தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளையும், மண்டேலா படத்திற்காக 2 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக 3 பெற்று மொத்தமாக தமிழ் சினிமா 10 விருதுகளை வாங்கியுள்ளது.