மனித உரிமைகளை காப்பதில் ஓரு நாளும் தவற மாட்டோம்-மு.க. ஸ்டாலின்

0
14

மனித உரிமைகளை காப்பதில் ஓரு நாளும் தவற மாட்டோம் சுயமரியாதை என்பது ஓவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது என்று மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு.

மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா இன்று கொண்டாடப்படுகிறது சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ,தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் அருண் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு பரிசுகளை வழங்கி மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார். திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கியுள்ளார்.

மனித உரிமைகளை காப்பதில் ஓரு நாளும் தவற மாட்டோம்-மு.க. ஸ்டாலின்

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், தி.மு.க 1996 ல் ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு தான் மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்த மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவினை நாம் கொண்டாடுகிறோம்.

மனிதரின் உரிமைகள், பண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்போம். சுயமரியாதை ஓவ்வொரு மனிதனுக்கும் முக்கியமானது, மனித உரிமைகளை காப்பதில் ஓரு நாளும் தவற மாட்டோம். மனித உரிமை ஆணையத்தின் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here