காமன் வெல்த் போட்டிகள் 2022: நடப்பாண்டுக்கான 22வது காமன் வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் இந்தியா உட்பட 72 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக நடந்து வரும் போட்டிகளில் பல நாட்டு வீரர்கள் பதக்கங்களை பெற்று பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
இதுவரை நடந்த போட்டியில் இந்தியா 8 தங்கப்பதக்கம், 8 வெள்ளி பதக்கம், 7 வெண்கலம் என 25 பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேரி உள்ளது.

மேலும், மகளிருக்கான மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், வினேஸ் போகட், பூஜா கேலட், பூஜா சிஹாக் ஆகியோரும் இன்று இரவு 9.30 மணி அளவில் தங்கப் பதக்கத்திற்காக மோத உள்ளனர்.
இதையும் படிக்க: காமன்வெல்த் போட்டி 2022: இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா
மல்யுத்த விளையாட்டில் இன்று மட்டும் இந்தியாவுக்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மல்யுத்தம் மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கக்ரான் வெண்கலம் வென்றார்.
ஆடவருக்கான மல்யுத்தம் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா தங்கம் வென்றார். அதைபோல் மகளிருக்கான மல்யுத்தம் 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஷாக்சி மாலிக் தங்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு தமிழக ஜோடி சரத் கமல், சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றனர். காலிறுதியில் 11-6 11-8 11-4 என்ற கணக்கில் இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தியது.
ஆடவருக்கான மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்சு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார்.