காமன்வெல்த் போட்டி 2022: இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா

0
10

காமன்வெல்த் போட்டி 2022: இதுவரை நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் இந்தாண்டுக்கான 22வது காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கு பெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை பெற்று இந்தியா பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

மகளிருக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கம் பதக்கம் இதுவாகும்.

காமன்வெல்த் போட்டி 2022: இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா

தொடர்ந்து நடந்த ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா இந்தியா சார்பில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து இந்தியாவின் அச்சிந்தா ஷூலி சிறப்பாக விளையாடி அவர் மொத்தம் 313 கிலோ தூக்கி இந்தியா சார்பில் மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 211 விளையாட்டு வீரர்கள் களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆண்களுக்கான ஹாக்கி போட்டி முதல் சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 11 – 0 என்ற கோல் என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் இருந்து மொத்தம் எட்டு வீரர்கள் கோல் அடித்தனர்.

இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்து சிறப்பாக விளையாடினார். ஹர்மன்பிரீத் சிங் 3, ஜுக்ராஜ் சிங் 2 கோல்களையும், அபிஷேக், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட் சர்மா, வருண் குமார், மன்தீப் சிங் ஆகியோர் ஒரு கோல் உட்பட 11 கோல்களை அடித்து இந்திய அணி 11-0 என்ற கணக்கில் இந்திய அணி காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேலும் இந்தியா சார்பில் பின் வரும் நாட்களில் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here