செஸ் ஓலிம்பியாட்டின் நிறைவு விழாவினை ஓளிபரப்ப ஓடிடி தளங்களுக்கு அழைப்பு

0
16

செஸ் ஓலிம்பியாட் 2022: சென்னை மாமல்லபுரத்தில் ஓரு தனியார் ரிசார்ட்டில் ஜூலை 29 முதல் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி நிறைவு விழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுளள்து. அதனை ஓளிப்பரப்ப ஓடிடி தளங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

44வது செஸ் ஓலிம்பியாட் மாமல்லபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இவ்விளையாட்டில் உலக நாடுகள் அனைத்திலும் செஸ் விளையாட்டி வீரர்கள் பங்கு பெற்று வருகின்றனர். இந்நிலையில், விழா தொடக்கம் மிக சிறப்பான முறையில் மிக பிரம்மாண்ட முறையில் நடத்தப்பட்டது.

செஸ் ஒலிம்பியாடின் துவக்க நிகழ்ச்சி கண்கவர் நிகழ்ச்சிகளுடன், பாரம்பரிய நடனங்களுடன் தொடங்கியது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருடன், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செஸ் ஓலிம்பியாட்டின் நிறைவு விழாவினை ஓளிபரப்ப ஓடிடி தளங்களுக்கு அழைப்பு

செஸ் துவக்க விழாவில் நடிகர் கமல் ஹாசன் குரலில், தமிழர் வரலாறு குறித்த ஆடியோ பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்றவாறு கலைஞர்கள் பெர்ஃபார்ம் செய்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு சதுரங்க கீதம் பாடலையும் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

தொடக்க விழா பிரம்பாண்டமாக நடைபெற்ற நிலையில், கடந்த ஜூலை 29ஆம் தேதி, நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கும் அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் உதயநிதி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார். மேலும், செஸ் ஒலிம்பியாடின் தொடக்க விழாவை விட நிறைவு விழா பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கும் எனவும் பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து, ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. உரிமம் பெறுபவர்களுக்கு ஓராண்டிற்கான ஒளிபரப்பு உரிமமும் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here