அதிகளவிலான தேசிய விருதுகளை வாங்கி குவித்த தென்னிந்திய மாநிலங்கள் கெத்து காட்டிய தென்னிந்திய படங்கள். தமிழ்நாடு, கேரளா, கன்னடம், தெலுங்கு என அதிகப்படியான தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன.
68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை புதுடெல்லியில் வழங்கப்பட்டது. இந்தியாவில் பல மொழிகளில் வெளி வந்த திரைப்படங்கள் அனைத்தும் பங்கு பெற்றன. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இது நேரலையில் ஒளிபரப்பானது.
2020-ல் ஏற்பட்ட கொரோனா தொற்றால், சில படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின. அந்த வருடம் 8 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால், பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டன. சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. இதற்கிடையே 2020-ம் வருடம் 30 மொழிகளில் 295 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றில் தமிழ்நாட்டின் சார்பில் 10 விருதுகளை 3 படங்கள் பெற்றது. அதைபோல மலையாளம் படங்களுக்கு 8 வருதுகளும், தெலுங்கில் படங்களுக்கு 4 க்கு விருதுகளும், கன்னடப் படங்களுக்கு 3 விருதுகளும் பெற்றுள்ளன. இந்தி படங்கள் 6 விருதுகள் மட்டுமே பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: தேசிய திரைப்பட விழாவில் 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா
இதில், தென்னிந்திய படங்களே பல விருதுகளை பெற்று தென்னிந்திய படங்களே ஆதிக்கம் செலுத்தி வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.